ஆந்திர பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா எனும் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏகாதசியை முன்னிட்டு குறித்த கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்த நிலையிலேயே இச் சம்பம் நிகழ்ந்துள்ளது
இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூபாய் 2 இலட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்”
