Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றி கழகம்

மே 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை மாற்றி எழுதி, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம் (TVK) தனிப்பெரும் பலம் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட சற்று குறைவாகப் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தாம் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார். சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் திமுக-வின் வாக்குவங்கியைத் தகர்த்துள்ளனர்.

ஆளுங்கட்சியான திமுக 59 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி தொகுதியில் பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபித்து வெற்றி பெற்றார்.கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே மட்டுமே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல் அதிகாரம், தற்போது ஒரு மூன்றாவது சக்தியின் கைகளுக்குச்
சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள லாக் பிலிப் சுற்றுலா முகாம்
அடுத்த செய்தி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வின் வழக்கு – சாட்சிக்கு பிடியாணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

பிப்ரவரி 17, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

அஹமதாபாத் விமான விபத்து – பலர் பலி

ஜூன் 12, 2025
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏப்ரல் 14, 2026
இந்தியா

கோவை சிறுமி கொலை வழக்கு

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?