Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள யுஹுவான் அருகே ‘டால்பின்’ புயல் மணிக்கு 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. இதன் காரணமாகச் சீனா முழுவதும் தீவிர ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய சண்டமாருதம் காரணமாக அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலின் சீற்றத்தால் ஷாங்காய் நகரின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் இயங்கவிருந்த 1,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

மேலும், ஹாங்சோ விமான நிலையத்தில் சுமார் 270 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆபத்தான கடலோரப் பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்ட படகுப் போக்குவரத்துப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவைத் தாக்குவதற்கு முன்பாக, இந்த டால்பின் புயல் ஜப்பானின் ஒகினாவா தீவுகளை மணிக்கு 216 கி.மீ வேகத்தில் மிகத் தீவிரமாகத் தாக்கியது. அதில் 6 பேர் காயமடைந்ததுடன், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் தைவானின் வடக்குப் பகுதியிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 180-க்கும் மேற்பட்ட விமான மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சீன வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழையும் நிலச்சரிவு அபாயமும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘நௌல்’ புயல் சீனாவைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘டால்பின்’ புயல் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ள பியர் பொலிவியர்
அடுத்த செய்தி டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூரமாக கொலை!

செப்டம்பர் 20, 2024
உலகம்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா!

ஜூலை 22, 2025
உலகம்

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவிப்பு

ஆகஸ்ட் 12, 2025
உலகம்

சீனாவில் சத்துமருந்துக்காக கழுதைகள் பலியாக்கப்படுகிறது!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?