Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ள பியர் பொலிவியர்

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா – அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு கனடா பணிந்து விடக்கூடாது என கனடா கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவியர் பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் கார்னிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவின் பல கோரிக்கைகளுக்கு ஒட்டாவா இணங்கியுள்ளதாக பொலிவியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, டிஜிட்டல் சேவை வரியை நீக்கியதும், அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்ட பதில் வரிகளை அகற்றியதும் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடியர்களுக்கு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட அரசாங்கம் தேவை எனக் கூறியுள்ள பொலிவியர், வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக கனடாவின் உள்நாட்டு பொருளாதார வலிமையை அதிகரித்து பேச்சுவார்த்தையில் சாதகமான நிலையை உருவாக்க பிரதமர் கார்னி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரை புதிய அமெரிக்க வரிகள் விதிக்கப்படவுள்ளன. இந்த வரிகள் சுமார் 10 நாட்களில் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்கும் Supply Management முறை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

கனடிய பால் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இந்த முறையில் எந்தவொரு சலுகையும் வழங்க வேண்டாம் என Dairy Farmers of Canada அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை கனடா பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள போதிலும், ஒவ்வொரு முறையும் அமெரிக்க தரப்பிலிருந்து புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், கனடாவின் Supply Management முறைக்கு தனது அரசாங்கம் தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை
அடுத்த செய்தி சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள்….

ஏப்ரல் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் தேசிய ஹோலோகாஸ்ட்டில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு

ஜூன் 16, 2025
கனடா

ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்

டிசம்பர் 11, 2025
கனடா

கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF)

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?