அல்பர்ட்டா மாகாணத்தில் தற்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் கனடியத் தேசியப் காவல்துறையினரை நீக்கிவிட்டு, அந்த மாகாணத்திற்கெனத் தனி உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரைக்குத் தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அல்பர்ட்டா அரசு அமைத்த ‘அல்பர்ட்டா நெக்ஸ்ட்’ (Alberta Next) குழுவின் இந்தப் பரிந்துரை “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும், இது மக்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் காவல்துறை யூனியன் தலைவர் பிரையன் சாவே (Brian Sauvé) விமர்சித்துள்ளார்.
மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தை அதிகரிக்கவும், மத்திய அரசுடனான உறவை மாற்றியமைக்கவுமென, அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் இந்த “’அல்பர்ட்டா நெக்ஸ்ட்’” குழுவை அமைத்தார்.
ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைப் போல ஆல்பர்ட்டாவும் சொந்தமாக காவல்துறை படையை வைத்திருக்க வேண்டும் என இந்த குழு தெரிவித்துள்ளது.
எனினும், தேசிய காவல்துறை கூட்டமைப்பு இந்தக் கருத்துகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஆல்பர்ட்டாவின் 99 சதவீத நிலப்பரப்பிற்கு கனடியத் தேசியப் காவல்துறையே, பாதுகாப்பு வழங்குகின்றது என, தேசிய காவல்துறை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
