Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறையில் வெற்றுக்காணிக்குள் பரவிய திடீர் தீ

ஜூலை 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
Screenshot
SHARE

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், பெற்றோலியத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் , அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்படுகிறது.

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் , அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட போதும் , பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும் பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

அதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை பதாகைகளை காட்சிப்படுத்துமாறு, பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவித்த போதும் , அது தொடர்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்புமாறு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த எரிபொருள் களஞ்சிய சாலை அப்பகுதியில் நிறுவப்படும் போது , அதனை சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படும் எனவும், தீ விபத்துக்கள் ஏற்படாதவாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் எரிபொருள் களஞ்சிய சாலையை சுற்றி கம்பி வேலிகள் மாத்திரமே காணப்படுவதுடன் , இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட வெற்றுக்காணிக்கு அருகில் தான் எரிபொருள் தாங்கிகள் காணப்படுவதாகும் , தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே குறித்த எரிபொருள் களஞ்சிய சாலையை சூழ பாரிய மதில்களை கட்டி , அதனை பாதுகாப்பான களஞ்சிய சாலையாக மாற்றுமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அயலவர்களால் , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தரசாவின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில் , தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனேடிய காளான்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள புதிய வரி – அதிருப்தியில் காளான் விவசாயிகள்
அடுத்த செய்தி தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்!

செப்டம்பர் 20, 2025
இலங்கை

நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

ஜூலை 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?