Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்திலுள்ள மிராபெல் (Mirabel) பகுதியில் அமைந்துள்ள ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த நெடுஞ்சாலையில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, இந்த முடிவினை போக்குவரத்து அமைச்சு
மேற்கொண்டுள்ளது. குறித்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வேக எல்லையானது தற்போது, மணித்தியாலத்துக்கு 80 கிலோமீட்டராக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இப்பகுதியில் நான்கு பேர் விபத்துகளால் உயிரிழந்துள்ள நிலையில், தற்காலிகமாக வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பது மாத்திரம் போதாது எனவும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிரந்தரமான மாற்று வழிகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீதியின் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி சில்வி லெஃபெவ்ரே (Sylvie Lefebvre) என்ற உள்ளூர்வாசியால் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட
இணையவழி மனுவில் (Petition), 2,300 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டு முதல் தாங்கள் இந்த
வீதியின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி வருவதாகக் குறிப்பிட்டார். “விபத்துகள் நடந்த பின்னர் அதற்குப் பதிலளிப்பதை நிறுத்திவிட்டு,
எதிர்காலத்தில் இத்தகைய சோகங்கள் நடக்காமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) கூறியுள்ளார்.

முந்தைய செய்தி உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்
அடுத்த செய்தி கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் ஓல்ட் மொன்றியல் தீ விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள்!

அக்டோபர் 13, 2024
கியூபெக்

நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஆகஸ்ட் 28, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருவருக்கு தட்டம்மை உறுதியானது

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?