கியூபெக் மாகாணம், செயிண்ட்-புரூனோ பகுதியில் உள்ள பிரபல அங்காடியில் விற்கப்பட்ட அரைக்கப்பட்ட மாட்டு இறைச்சி (Ground Beef) மற்றும் கன்றுக்குட்டி இறைச்சி (Ground Veal) ஆகியவற்றில் சிறிய உலோகம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘மார்ச்சே லம்பேர்ட் எட் ப்ரெரெஸ்’ (Marché Lambert et Frères inc. / IGA Extra) சூப்பர் மார்க்கெட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுமே பிரத்யேகமாக விற்கப்பட்ட அனைத்து அரைக்கப்பட்ட மாடு மற்றும் கன்று இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம் என நுகர்வோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறைச்சியை அரைக்கும் அல்லது பொதி செய்யும் செயல்பாட்டின் போது எதிர்பாராதவிதமாக உலோகம் மற்றும் கடின பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடை நிர்வாகம் தானாகவே முன்வந்து இந்தத் தயாரிப்புகளைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக (Voluntary Recall) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

