Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான முரண்பாட்டை விவரித்த தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா 

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra) ஒட்டாவாவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட மேடையில், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் வர்த்தக மற்றும் ராணுவ ரீதியான முரண்பாடுகளை வெளிப்படையாகப் பட்டியலிட்டு உரையாற்றியுள்ளார்.

கனேடிய மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களுக்கு விதித்துள்ள தடைகள், முடங்கியுள்ள ‘கோர்டி ஹோவ்‘ சர்வதேசப் பாலம திறக்கப்பட வேண்டியமை மற்றும் 50 சதவீத அமெரிக்க எஃகு-அலுமினிய வரிவிதிப்பு ஆகிய முக்கிய வர்த்தகப் பூசல்களைக் குறிப்பிட்ட அமெரிக்கத் தூதர், இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என கனேடிய அரசுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்ராறியோ உள்ளிட்ட சில மாகாணங்கள், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்களை தங்களது அரசு மதுபானக் கடைகளின் காட்சியறைப்பகுதிகளில் இருந்து நீக்கின.

இது குறித்து மேடையில் பேசிய தூதர் ஹூக்ஸ்ட்ரா, “அடுத்த ஆண்டு நாம் கொண்டாடும் சுதந்திர தின விழாவின் போது, ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்க மதுபானத்தைக் கையில் ஏந்தி, மதுவிருந்து (Toast) சாப்பிட வேண்டும் என்பதே தனது தற்போதைய இலக்கு” என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்புப் பேச்சுவார்த்தைகள் கடந்த 14 மாதங்களாக எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இன்றி முடங்கியுள்ள சூழலில், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ராவின் இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவான நிறுவனம் – நேட்டோ  உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும்
அடுத்த செய்தி மாதகலில் விபத்து – முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவில் 2வது முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அறிவிப்பு

டிசம்பர் 18, 2025
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசின் 16 ஆயிரம் பணிநீக்கத் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி வேலையைத் தக்கவைக்க வேலை பரிமாற்ற 39 முறையில் ஆர்வம்

ஜனவரி 24, 2026
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?