மத்திய அரசில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது
வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேலை பரிமாற்றம் (Alternation)என்ற புதிய முறையை நாடி வருகின்றனர்.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு, சுமார் 16,000 அரசுப் பணியிடங்களை ரத்து செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், இந்த வாரம் மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு பணிநீக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் மட்டும் சுமார் 8,500 ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பணிநீக்க எச்சரிக்கை பெற்ற ஊழியர்களுக்கு 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த சிக்கன நடவடிக்கையின் கீழ், ஒரு ஊழியரின் வேலை பறிபோகும் நிலையில் இருந்தால், அவர் வேலையிலிருந்து தானாக
முன்வந்து விலக விரும்பும் மற்றொரு ஊழியருடன் தனது இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.
விலக விரும்பும் ஊழியர் அரசின் இழப்பீட்டுத் தொகையை (Buyout) பெற்றுக்கொண்டு வெளியேறுவார் எனவும் வேலை பறிபோகும் நிலையில் உள்ள ஊழியர், அந்த வெற்றிடமான பதவிக்குச் சென்று தனது பணியைத் தொடர்வார் எனவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளாது.
இந்தச் சூழலை ஹங்கர் கேம்ஸ் (Hunger Games) போட்டி என வர்ணித்துள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், மத்திய அரசு, தனது
ஊழியர்களை ஒருவருக்கொருவர் மோத விடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த நிரந்தர ஊழியர்களை நீக்கிவிட்டு, அதிகச் செலவில் தனியார் ஆலோசகர்களை மத்திய அரசு பணியமர்த்துவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.