‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி மற்றும் பொதுமகன் முதலானோருக்கான இறுதி அஞ்சலிச் சடங்குகள் மொன்றியல் நகரில் தனித்தனியாக நடத்தப்பட்டன.
முகமது லமீன் பென்ரெடோவன் என்ற காவல்துறை அதிகாரியும் மிச்செல் மோஷே மிஸ்ராஹி என்ற பொதுமகனும், இத்தாக்குதலில் துப்பாக்கிக் குண்டுகளால் உயிரிழந்துள்ளனர். காவல்துறை அதிகாரி முகமது லமீன் பென்ரெடோவன் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பள்ளிவாசலில் அதீத பாதுகாப்புடன் மிகவும் ரகசியமாக (Strictly Private) அவரின் பூதவுடலுக்கான இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு, பின்னர் லாவல் (Laval) மயானத்தில் அந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் அரசுமுறை அதிகாரப்பூர்வ அஞ்சலி (Civic Ceremony) செலுத்தப்படும் என, பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) தெரிவித்துள்ளார்.


