Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜூன் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் காவல்துறையினர் தங்களை அநியாயமாக வழிமறித்து மிளகுத்தூள் தெளிப்புத் திரவத்தைச் (Pepper spray) செலுத்தித் துன்புறுத்தியதாகக் கறுப்பினக் குடும்பம் ஒன்று உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

மொன்றியல்-நோர்ட் (Montréal-Nord) பகுதியில், கடந்த ஆண்டு குடும்ப பார்பிக்யூ பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே, மொன்றியல் காவல்துறையினர் தங்களைத் துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தக் கறுப்பினக் குடும்பத்தினர் தங்களது வீட்டின் பின்புறத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட பார்பிக்யூ நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மொன்றியல் பொலிஸ் பிரிவின் ‘காவல் நிலையம் 39’ (Station 39) ஐச் சேர்ந்த அதிகாரிகள், அங்கிருந்தவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்போ அல்லது நியாயமான காரணமோ இன்றி மிளகுத்தூள் திரவத்தை மிக மோசமாகத் தெளித்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி, பொலிஸ் ஒழுக்காற்று சபையிடம் தற்போது உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஏற்கனவே கறுப்பின மற்றும் அரபு மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அதே ‘காவல் நிலையம் 39’ இல் பணியாற்றும் அதிகாரிகளை மையப்படுத்தியே, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக நிறவெறிப் பாகுபாட்டில் (Racial profiling) ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியே இது என்றும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

முந்தைய செய்தி கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி
அடுத்த செய்தி ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மூலோபாய ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் – ஃபிராங்கோயிஸ் லெகால்ட்

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஜூன் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

ஏப்ரல் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?