கியூபெக்கில் வாழும் ஆங்கில இளைஞர்கள், தங்களை உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ளவும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்ற போதும், அவர்கல் மிகக் குறைந்த வருமானத்தையே பெற்று வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கில மொழி பேசும் சமூகத்தினரின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இயங்கும் PERT என்ற அமைப்பு நடத்திய, விரிவான ஆய்விலேயே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் கடுமையான மொழிச் சட்டங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பிரெஞ்சு மொழிப் பயிற்சிகள் போதிய அளவில் கிடைக்காதமையே, இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆய்வின்படி, கியூபெக்கில் உள்ள 18 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆங்கிலேய இளைஞர்களின் சராசரி வருடாந்தர வருமானம் (Median Income), பிரெஞ்சு மொழியை முதன்மையாகப் பேசும் இளைஞர்களின் வருமானத்தை விட கணிசமாகக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


