Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கு ஊக்க பானங்கள் விற்க தடை – புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு.

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாகக் கூறப்படும் ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ (Energy Drinks) எனப்படும் ஊக்கபானங்களை 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு விற்பனை செய்வதை முற்றாகத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் மாகாண சட்டமன்றத்தில் (National Assembly) உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில், 15 வயதுடைய கியூபெக் சிறுவன் ஒருவன் இந்த எனர்ஜி டிரிங்க்ஸை அருந்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக அகால மரணமடைந்திருந்தார். அதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் உருவெடுத்த பாரிய மக்கள் போராட்டத்தின் வெற்றியாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சோனியா பெலாஞ்சே (Sonia Bélanger), இளையோரின் ஆரோக்கியத்தில் எனர்ஜி டிரிங்க்ஸ் ஏற்படுத்தும்
தீங்கான விளைவுகளைத் தடுத்தல்" என்ற தலைப்பிலான “பில் 9” சட்டமூலத்தை சட்டமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

இப்புதிய சட்டத்தின்படி, கியூபெக் மாகாணத்தின் புவியியல் எல்லைக்குள், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கடைகளிலோ, இணையத்தளம் (Online) மூலமாகவோ அல்லது தானியங்கி விற்பனை இயந்திரங்கள் (Vending Machines) வழியாகவோ ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ (Energy Drinks) எனப்படும் ஊக்கபானங்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்படுகிறது.

மேலும், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காகவோ அல்லது பிறருக்காகவோ இந்த பானங்களை வாங்குவதும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இச்சட்ட விதிமுறைகளை மீறி, இந்த பானங்களை வாங்கும் அல்லது கைவசம் வைத்திருக்கும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 100 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான சட்டக் கட்டுப்பாட்டுக்கான பின்னணியில் சகாரி மிரோன் இயக்கம்' (Zachary Miron Movement) என்ற மக்கள் போராட்டக் குழு முக்கியப் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பல்சர்(Pulsar) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லோயிக் கோர்டெல் பதவிநீக்கம்
அடுத்த செய்தி “அல்பர்ட்டா(Alberta) தனிநாடாகப் பிரிந்தாலும் இரட்டைக் குடியுரிமை உண்டு” – உத்தரவாதம் இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கடற்தொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அட்டமஸ்தானாதிபதி பல்லேகல ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மே 17, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?