இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்ரிய அபேசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்க நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
