சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் கைதுகளைத் தாம் எதிர்க்கவில்லையெனவும் மாறாக அதை வரவேற்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி செய்கின்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் சிறிநேசன் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ஊழல்வாதிகள் கடந்தகாலங்களில் சொர்க்கத்தில் உள்ளதை போல் வாழ்ந்ததாக சிறிநேசன் குறிப்பிட்டார்.
