அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தைப் பிராந்திய ரீதியாகக் கனடாவிலிருந்து பிரிப்பது தொடர்பான விவகாரத்தில், ஆளும் ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கும் அந்த மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்துக்கும் (Danielle Smith) இடையே, கடுமையான கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் தமது கட்சி நடுநிலை வகிக்கும் என கட்சித் தலைவர் ராப் ஸ்மித் (Rob Smith) அறிவித்திருந்தார்.
அந்த நிலையில், அவரது கருத்தை அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் பகிரங்கமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்தை கனடாவுடன் தொடர்ந்து வைத்திருப்பதா (Remain) அல்லது எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகப் பிரிந்து செல்வதற்கான (Separation) வாக்கெடுப்பை நடத்துவதா என்பது குறித்த மாகாண அளவிலான பொதுஜன வாக்கெடுப்பு எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
