Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அல்பர்ட்டா சுதந்திர வாக்கெடுப்பு மக்களை ஏமாற்றும் அபாயகரமான வித்தை – பிரதமர் மார்க் கார்னி

மே 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இருந்து பிரிந்து செல்வது குறித்து அல்பர்ட்டா மாகாண அரசு அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள வாக்கெடுப்பின் வினா வடிவம், மக்களைத் தவறாக வழிநடத்தும் ஒரு அபாயகரமான ஏமாற்று வித்தை (Dangerous Bluff) என்று கனேடியப் பிரதமர் மார்க் கார்னி சாடியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசிடம் கூடுதல் பலத்தைப் பெறுவதற்காக இத்தகைய பிரிவினை ஆயுதத்தைப் பயன்படுத்துவது அல்பர்ட்டா மாகாணப் பொருளாதாரத்திற்கே பேரழிவாக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய நாடாளுமன்றம் தெளிவுச் சட்டத்தின் (Clarity Act) கீழ் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அண்மையில் மாகாணப் பிரிவினைக்கான முதற்கட்ட சட்டப் படிவக் கேள்வியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதைத் தொடர்ந்து, ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பிரதமர் மார்க் கார்னி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரெக்ஸிட் (Brexit) விவகாரத்தின் போது, தான் இங்கிலாந்து வங்கியின் (Bank of England) ஆளுநராகப் பணியாற்றிய அனுபவத்தை, இங்குக் கோடிட்டுக் காட்டிய பிரதமர் கார்னி, இத்தகைய வாக்கெடுப்புகள் எவ்வாறு கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்பதை விளக்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் சாதகமாக வாக்களித்தால் மென்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரிட்டனில் கூறப்பட்டது என்று கூறிய மார்க் கார்னி, ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும், பிரித்தானிய மக்கள் தாங்கள் எதற்காக வாக்களித்தோம் என்று தெரியாமல், அதன் பொருளாதாரப் பேரழிவை இன்றும் சரி செய்யப் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இதேபோன்றதொரு குழப்பமான வினா 1995 ஆம் ஆண்டு கியூபெக் பிரிவினை வாக்கெடுப்பின் போதும் பயன்படுத்தப்பட்டதை மார்க் கார்னிசுட்டிக்காட்டினார்.

முழுமையான சுதந்திரம் என்று கூறாமல் புதிய பொருளாதாரக் கூட்டாண்மை என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டில் கியூபெக் அரசு, மக்களை திசைதிருப்ப முயன்றதாகக் கார்னி விமர்சித்தார். முன்னாள் கியூபெக் வாக்கெடுப்புகளுக்குப் பிறகு கனடாவில் கொண்டுவரப்பட்ட தெளிவுச் சட்டம் (Clarity Act) தற்போதைய அல்பர்ட்டா விவகாரத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!
அடுத்த செய்தி மொன்றியலின் 9 முக்கிய வணிக வீதிகள் பாதசாரிகளுக்காக மட்டுமே திறக்கப்படும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள்….

ஏப்ரல் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

8 ஆண்டுகளின் பின் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்.

பிப்ரவரி 19, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க இராணுவ தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கனடாவின் கேமரா அமைப்பு

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?