Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான ரில்வின் வெளியிட்ட கருத்து – தேர்தலை முடக்கும் சதி

மே 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் எனக் கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலுக்காகக் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப் பட்ட நிதியானது, ‘டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்டதால், இந்த வருடம் தேர்தல் நடத்தப்படமாட்டாது என ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியிருந்தால்,அது நாடாளுமன்றத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதியோ, அமைச்சரவை பேச்சாளரோ பேச வேண்டிய விடயங்களை, அரசில் எந்தப் பதவியும் இல்லாத ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், தானே அரசை நடத்துவது போன்ற தொனியில் பேசுவது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது பலமுறை கூடி ஆராய்ந்து வரும் பின்னணியில், ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு தேர்தல் முடக்கும் சதியை வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

வடக்கிலாவது மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூட அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்திருந்தார். முழு நாட்டிலும் தேர்தலை நடத்த முடியாவிட்டாலும், வடக்கு, கிழக்கில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்குப் பாரிய நிதி தேவைப்படாது.

இந்தச் சூழலில் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுக்கத் தவறினால், தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு நாமும் துணைபோவ தாக அமைந்துவிடும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தாங்கள் தீர்க்கப்போவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசு, வட பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கவில்லை.

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச விமானங்கள் வந்து இறங்கக்கூடிய அளவில் விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது. இதனைச் செய்திருந்தால் அரசின் வருவாய் அதிகரித்திருக்கும். வடக்கு மாகாண அபிவிருத்தியில் தற்போதைய அரசு என்ன சாதனையைப் புரிந்துள்ளது? அல்லது இங்குள்ள எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது?

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பில் ‘தேசிய அரசு’ அமைப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகின்றது. எனினும், தேசிய அரசு அமைப்பதைக் காட்டிலும், முடங்கியுள்ள மாகாண சபைகளை நிறுவினால், மாகாண அரசுகளே தாங்களாக முன் வந்து பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரத்துக்குப் பங்களிக்க முடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

முந்தைய செய்தி ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்
அடுத்த செய்தி களுவாஞ்சிகுடி கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

அக்டோபர் 3, 2025
இலங்கை

நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு நடத்திய இந்திய கடற்தொழிலாளர்கள்

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 289 பேர் மீது விசாரணை

மே 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – ஆளுநர்

ஜூலை 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?