நாட்டில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர் கூடும் இடங்களில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
