Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக விசாரணைக் குழு நியமனம்

மே 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்த சீலனை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் நியமித்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த உத்தியோகத்தர் 33 வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமையானது NP/11/MN/ACLG/2023/01 இலக்க 2024.01.02 ஆம் திகதி கணக்காய்வு அவதானிப்புக்கள் – 2023 என்ற தலைப்பிடப்பட்ட மாகாண உள்ளக கணக்காய்வாளரது அறிக்கையின் பந்தி இல 3.1 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

பந்தி இல 3.2, 3.3, 3.4 மற்றும் 3.5 ஆகியவற்றிலும் காசோலை முறைகேடுகளை வெளிக்கொணர்ந்து உள்ளது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

குறித்த கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி அலுவலர் தொடர்பான ஐயவினா தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஆரம்ப புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் தலைவராக வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சுரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.ச.ராதிகா மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக பொறியியல் சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் ரி.அருங்கலைச் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அண்மையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்ற போது மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவில் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசு கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 2, 2025
இலங்கை

யாழில். இருந்து கேதீஸ்வரத்திற்கு பாத யாத்திரை.

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும்தடை!

ஜூன் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?