களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞன் ஒருவர், சனிக்கிழமை இரவு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந் நிலையில் இன்றையதினம் (25) காலை களுதாவளை பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்படி களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். .
இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் இல்லாத நிலையில், இன்று திங்கட்கிழமை கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
