Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பில்லி பிஷப் தீவு விமான நிலைய விரிவாக்க விவகாரம்

மே 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரொறன்ரோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள பில்லி பிஷப் தீவு விமான நிலையத்தை (Billy Bishop Toronto City Airport) விரிவாக்கம் செய்து, அங்கு பெரிய ரக ஜெட் விமானங்களை (Jets) இயக்குவதன் மூலம், 2050 ஆம் ஆண்டளவில் மாகாணத்திற்கு ஆண்டுதோறும் 8.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார லாபம் கிடைக்கும் என்ற ஒன்ராறியோ அரசாங்கத்தின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசும், இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் ரொறன்ரோ துறைமுக அதிகாரச் சபையும் (PortsToronto) இந்த பிரம்மாண்டமான நிதிசார் கணிப்பீட்டை வெளியிட்டன.

அறிவிப்பு வெளிவந்து பல வாரங்கள் கடந்த போதிலும், அதற்கான எவ்வித முறையான ஆதாரங்களோ அல்லது புள்ளிவிவரக் கணக்கீடுகளோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் பொருளாதார மற்றும் வான்வழிப் போக்குவரத்து நிபுணர்கள் இந்த அறிவிப்பைக் கடுமையான சந்தேகத்துடன் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் புகழ்பெற்ற வாட்டர்ஃபிரண்ட் (Waterfront) கடற்கரை பிராந்தியத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடிய இந்தத் திட்டம், ஒன்ராறியோ மாகாண அரசுக்கும் மாநகர சபைக்கும் இடையிலான ஒரு பெரும் அரசியல் அதிகாரப் போராட்டமாக மாறியுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையம் அமைந்துள்ள நிலத்தின் 20 சதவீதப் பகுதி ரொறன்ரோ மாநகர சபைக்குச் சொந்தமானதாகும்.

இந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அத்துடன், சர்ச்சைக்கரிய பில் 5 இடத்தை ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது விசேட பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) மாற்றவும் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம், மாநகர சபையின் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறி மாகாண அமைச்சரவையே இங்கு நேரடியாக முடிவுகளை எடுக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியல் நகரின் மையப்பகுதியில் திரண்ட 25,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவோடு கைகோர்க்கும் கனடா….

மே 21, 2025
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் பாரிய தீ விபத்து

ஜூலை 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு !

மார்ச் 19, 2025
உலகம்கனடா

ரஷ்யாவில் பதிவான “சக்திவாய்ந்த நிலநடுக்கம்” கனடாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !(Video)

ஜூலை 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?