கனடா அரசு, குடியுரிமை சட்டத்தில் பெரும் திருத்தத்தை மேற்கொண்டு வரலாற்று மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதுவரை, வெளிநாட்டில் பிறக்கும் முதல் தலைமுறை குழந்தைகளுக்கு மட்டுமே கனடா குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.
இதனால் இரண்டாம் தலைமுறை குழந்தைகள் குடியுரிமையை பெற முடியாத சூழ்நிலை நிலவியது.
இந்த நிலைமையை எதிர்த்து பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் கனடா குடியுரிமை பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குப் பின்வரும் தலைமுறைகளுக்கும் உரிமை கிடைக்காததை அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், அனைத்து தலைமுறைகளுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா, கடந்த நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
இந்த மாற்றத்தின் மூலம், கனடா குடியுரிமை பெற்றவர்கள் எங்கு குழந்தை பெற்றாலும் – அவை எத்தனை தலைமுறை சென்றாலும் – அந்த பிள்ளைகளுக்கு கனடா குடியுரிமை வழங்கப்படும்.
இந்த தீர்மானம், இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள கனடா குடியுரிமை பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.