Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கனடாவிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார் பேராசிரியர் காட் சாத்

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் புகழ்பெற்ற கான்கார்டியா பல்கலைக்கழக (Concordia University) பேராசிரியரும், சர்வதேச அளவில் அறியப்பட்ட பரிணாம நடத்தை விஞ்ஞானியுமான (Evolutionary Behavioral Scientist) முனைவர் காட் சாத் (Dr. Gad Saad), நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தாம் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொன்றியல் பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் அதீத அரசியல் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களே தனது இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஜோ ரோகனின் (Joe Rogan) ‘தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்’ (The Joe Rogan Experience) பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடிய போதே பேராசிரியர் காட் சாத் தனது முடிவை வெளியிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் (Ole Miss) சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த தாம், இந்த கோடைக்காலம் முதல் மிசிசிப்பியில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகருக்குத் தனது குடும்பத்துடன் நிரந்தரமாக இடம்பெயரவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, மொன்றியலில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் யூதர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரவாதக் கருத்துக்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் காட் சாத் குறிப்பிட்டார்.

தமக்குத் தொடர்ச்சியாகக் ‘கொலை மிரட்டல்கள்’ (Death Threats) வந்ததன் காரணமாக, கான்கார்டியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

லெபனான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட யூத வம்சாவளியினரான காட் சாத், கடந்த 1975 ஆம் ஆண்டு லெபனான் உள்நாட்டுப் போரின் போது தனது குடும்பத்துடன் மொன்றியலில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ‘வெஸ்ட் ஐலண்ட்’ கிளைப் பாதை
அடுத்த செய்தி காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம்

ஏப்ரல் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயல் அபாயம் – மொன்ரியலில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மார்ச் 10, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் “பாலியல் தொழிலாளர்களின் 30 ஆண்டு கால எதிர்ப்பு” புதிய கண்காட்சிப்பிரிவு.

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?