Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் 31-வது கவர்னர் ஜெனரலாக பதவியேற்கிறார் முன்னாள் நீதியரசர் லூயிஸ் ஆர்பர்

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் 31-வது கவர்னர் ஜெனரலாக (Governor General) முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி அன்று பதவியேற்கவுள்ளார்.

தற்போது கனடாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்துக் கொண்டிருக்கும் மேரி சைமனுக்குப் (Mary Simon) பிறகு, அந்தப் பொறுப்பிற்கு லூயிஸ் ஆர்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுச் சேவையில் லூயிஸ் ஆர்பரின் அர்ப்பணிப்பு ஈடுஇணையற்றது எனப் பிரதமர் மார்க் கார்னி அவரைப் புகழ்ந்துள்ளார்.

லூயிஸ் ஆர்பர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் முதலான இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பதால், கனடாவின் பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்ற இவரே தகுதியானவர் என, மத்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி அன்று கனடிய செனட் சபையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) முறைப்படி வைபவரீதியாக, கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்கவுள்ளார். அன்றைய தினம் அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த தயாராகும் மொன்றியல்
அடுத்த செய்தி செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் மழை குறுக்கீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

நேரத்தைப் நோயாளிகளுக்காகச் செலவிடும் பெண் குடும்ப மருத்துவர்கள்

ஜனவரி 15, 2026
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் எல்லைகளை பலப்படுத்தும் புதிய சட்டம்!

ஜூன் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?