Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கனடா

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவும் மெக்சிகோவும் தங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒரு புதிய, “விரிவான மூலோபாய கூட்டாண்மை” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மைகளைச் சமாளிப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னியும், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாமுக்கும் இடையிலான சந்திப்பு மெக்சிகோ சிட்டியில் நடைபெற்றது.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்து இரு நாடுகளும் கவலை கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு CUSMA எனப்படும் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு வரவுள்ள சூழலில், இந்த புதிய கூட்டாண்மை ஒப்பந்தமானது, வலுவான ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.

மெக்சிகோ நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேசிய அரண்மனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மார்க் கார்னி இந்த புதிய ஒப்பந்தம் குறித்து கருத்துரைத்தார்.

கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் ஏற்கெனவே வலுவாக உள்ள உறவை இந்த ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தும் என, அவர் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், ”எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க ஒத்துழைப்பு ஒன்றே வழி என்பதை மெக்சிகோவும் கனடாவும் உறுதியாக நம்புகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம், வர்த்தகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.

முந்தைய செய்தி யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்
அடுத்த செய்தி பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் – செயிண்ட்-லோரண்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு விசாரணை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 18, 2025
கனடா

ஏமாற்றம் அடைந்த விமானப் பயணிகள்

டிசம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !

மார்ச் 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஜூன் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?