Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும்,நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே இதன் நோக்கமாகும்.

இந் நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டார்கள்.

முந்தைய செய்தி கொழும்புத்துறை இறங்குதுறை 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு
அடுத்த செய்தி ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

நவம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வீதி விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி!

செப்டம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 25, 2025
இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய குழந்தை மருத்துவ விடுதி திறந்து வைக்கபட்டுள்ளது!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?