கியூபெக் மாகாணத்தின் பொது மின்சார நிறுவனமான ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 2,700 தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சுமார் இரண்டரை ஆண்டுகாலமாக நீடித்து வரும் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்தே இந்தத் தீர்மானத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கனடிய பொது ஊழியர் சங்கத்தின் கீழ் இயங்கும் இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் நேற்று வேலைநிறுத்த அறிவிப்பை முறைப்படி வழங்கினர்.
தகுதியான உள்ளூர் ஊழியர்கள் நிறுவனத்தில் இருக்கும்போது, வெளி நிறுவனங்களுக்குப் பணிகளை ஒப்பந்தம் (Contracting Out) விடுவதை கனடிய பொது ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
இது மறைமுகத் தனியார்மயமாக்கல் என்றும், இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் போராட்டம் தொடங்கவுள்ளது.
முதற்கட்டமாக, ஊழியர்கள் மேலதிக நேரம் (Overtime) வேலை செய்ய மறுக்கும் ‘வேலை நிறுத்த’ முறையைக் கையாளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
