கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கியூபெக் மருத்துவர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கியூபெக்கில் தற்போது 350 மருத்துவர்கள் கூடுதலாக பணியில் உள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 26,775 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த மாகாணத்திற்கும் ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும்,மாகாணத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
