Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் தீ விபத்து

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மொண்ட்ரியல் நகரிலுள்ள பார்க் எக்ஸ்டென்ஷன் (Parc-Extension) பகுதியில் உள்ள இருமாடிக் கட்டடமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 30 பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில், டி லெப்பே வீதிக்கு (De l’Épée Avenue) அருகில் அமைந்துள்ள சென்-ரோக் வீதியிலுள்ள (St-Roch Street) இருமாடிக் கட்டடத்திலேயே இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த கட்டடத்தின் தரைத்தளம் வணிக பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மேல் தளத்தில் சுமார் 10 குடியிருப்புகள் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் உரத்த வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்ததும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்னரே கட்டடம் முழுவதும் தீ பரவி எரிந்துகொண்டிருந்ததாகவும், அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் மொண்ட்ரியல் தீயணைப்புத் திணைக்களத்தின் பிரிவு அதிகாரி வில்லியம் முர்ரே (William Murray) தெரிவித்தார்.

இவ்விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான மூவர் அவசர மருத்துவச் சேவைப் பிரிவினரால் (Urgences-santé) மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தங்களது வீடுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளான 30 பேருக்குக் கனடிய செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) தற்காலிக இருப்பிடம் மற்றும் அவசிய உதவிகளை வழங்கி வருகிறது.

காலை 7.00 மணியளவில் தீ பரவுவது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தீ மீண்டும் பரவாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காகத் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இத் தீ விபத்திற்கான காரணம் குறித்துத் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிறிஸ்டின் பிரெஷெட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா
அடுத்த செய்தி ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் படகு விபத்து – இருவர் உயிரிழப்பு

மார்ச் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நடக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலையே தீர்வு…

ஏப்ரல் 26, 2025
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஜூன் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?