ஸ்ரீலங்கா கிரிக்கெட் துறையானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயட்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற்க் கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் இன்றைய செயட்குழு கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்கு அனைவரும் ஆர்வமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
