Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி காணி உரிமையாளர்களிடம் பொலிஸ் கெடுபிடி.

ஏப்ரல் 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வருமாறு மாவட்ட செயலர் 17 பேருக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு சென்றவேளை, விகாரைக்கு அருகில் பொலிஸ் வீதி தடையை ஏற்படுத்திய பொலிஸார் , விகாரை பகுதிக்கு செல்வோரின் அடையாள அட்டைகளை பரிசோதித்து, பதிவுகளை மேற்கொண்டதுடன், காணி உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை கைகளில் வைத்து சோதனையிட்டு , பெயர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மாத்திரமே அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.

அதனால் , எமது காணிகளை அடையாளம் காட்ட வருமாறு , மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதனால் தான் வந்தோம் , பதிவுகளை மேற்கொண்டு பொலிஸ் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து தான் எமது காணிகளை அடையாளம் காட்ட வேண்டும் என கூறினால், நாங்கள் திரும்பி வீடு செல்கிறோம் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர். அதனால் அவ்விடத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது.

அதேவேளை, தென்னிலங்கையில் இருந்து சில பிக்குகள் உள்ளிட்ட , தென்னிலங்கைவாசிகள் சிலர் எந்த பதிவுகளும் இல்லாமல் உள்ளே சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு இருக்கும் உரிமை காணி உரிமையாளர்களான எங்களுக்கு இல்லையா என பொலிசாரிடம் காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தற்போது காணி அளவீட்டு பணிகளுக்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகைதந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபானந்தராசாவும் வருகை தந்துள்ளார்.

காலை 08 மணிக்கு அளவீட்டு பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 10 மணிவரையில் அளவீட்டு பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டது.

முந்தைய செய்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு
அடுத்த செய்தி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி விலக தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

ஜனவரி 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?