யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம் ,26 ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஊடக விவரிப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஷான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது, சட்டத்துறைத் தலைவர் திருமதி கோசலை மதன் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு பற்றி விளக்கமளித்தார்.