Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மைதானத்தை தனது காணி என உரிமை கோரி சென்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தடுத்து நிறுத்திய மக்கள்.

ஜனவரி 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுகழக மைதானதை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது

மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுகழக மைதானமாக பயன்படுத்திவரும் மைதானத்தில் ஒருபகுதியை சம்பவதினமான இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பொரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தான் சட்டரீதியாக 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் என்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரசகாணி எனவும் இவர் ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளார் இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு ஆவணங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான்.

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது பொலிஸ் அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும் இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் எனது 15 பேச் காணியை தரவும் நான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும்? எனவே நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என்றனர்.

தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய பொலிஸ் அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முந்தைய செய்தி யாழ் பல்கலையில் சட்ட மாநாடு.
அடுத்த செய்தி கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தலதா மாளிகைக்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு…

ஏப்ரல் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாவனெல்ல – தனகமவில் மூவர் கொலை

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார்

மார்ச் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல்

ஏப்ரல் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?