கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் இணைந்து இன்றைய தினம் 23.01.2025 ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் விவசாயி ஒருவரை சொந்த விடயம் தொடர்பாக தாக்கியுள்ளார்.
அத்துடன் இவர் பலரிடம் முன்னுக்குப் பின் முரணான வகையில் பலருடன் முரண்படுவதாகவும் அதனை தட்டிக் கேட்டால் நான் ஊடகவியலாளர் என கூறி வருகிறார்.
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் மற்றும் இரணைமடு கமக்ககார அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதன் காரணமாக இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.