தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கியுள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வவுனியா மாவட்டச் செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர அதிகாரிகளுக்கு இன்று (23.01) அறிவுறுத்தியுள்ளார்.
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பீடியா பண்ணை கிராமம் வவுனியாவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் மிகவும் கடினமான சூழலில் அமைந்துள்ள கிராமமாகும்.
செட்டிகுளம் – மன்னார் பிரதான சாலையிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் காட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பாதுகாப்பான மையத்தை அமைக்கக் கூட ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லை.
மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர். உழவு இயந்திரம் மற்றும் பாரவூர்திகளை பயன்படுத்தி அதற்குள் தங்கியிருக்கின்றனர். குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட அரச அதிபர், இந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.