தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுண்டிகளம் கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரத்தில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் பகுதியில் உள்ள பேப்பாரப்பிட்டி பகுதிக்கு திடீர் விஜயம் செய்த அவர், அப்பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோரை சந்தித்தார்.
சுண்டிகுளம் சந்தி தொடக்கம் கடற்கரை ஊடாக பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 09 கிலோமீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதனால் சட்டவிரோத தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமது கடல் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம் உழவு இயந்திரத்தினை பயன்படுத்தி சுண்டிக்குளம், கல்லாறு மீனவர்கள் பிடிக்கின்ற மீனை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் இவ்வீதி காணப்படுவதாகவும், இதன் காரணமாக தாம் கடலில் பிடிக்கின்ற மீனை பாதி விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வீதி புலரமைக்கப்படுமாயின் நேரடியாகவே பலபகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்யவும், சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.