Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி

ஜனவரி 2, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு.

அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று, தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் , திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தினையும் , திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை இப்போது அமைந்துள்ள பகுதி தனியாருக்கு சொந்தமான காணிகள். திஸ்ஸ விகாரைக்கு என சொந்தமாக காணிகள் இருக்கும் போது இராணுவத்தினருடன் இணைந்து தனியார் காணிகளை அபகரித்து விகாரையை கட்டியுள்ளனர். இது மகா தவறு, பௌத்த பிக்குகள் அவ்வாறு செய்திருக்க கூடாது.

மற்றவர்களுக்கு போதனை செய்யும் நாங்கள் , பிறர் பொருட்களை எடுக்க கூடாது என புத்தரே சொல்லி இருக்கிறார்.

தற்போது விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை நான்கு கட்டமாக விடுவிப்பதாக கூறி இருப்பதும் ஏமாற்று வேலையே. நான்கு கட்டம் என கூறுவார்கள்.

பிறகு ஒவ்வொரு கட்டத்திற்கு இடையில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேலாகும். எனவே விடுவிப்பதனை ஒரு தடவையில் தர வேண்டும் என கோரி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த மக்களின் போராட்டம் நியாயமானது. இதனால் தான் இந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என நான் குரல் கொடுத்தேன். அதன் பிறகு யாழ்ப்பாண நாக விகாரை விகாரதிபதியும் எனது கருத்தோடு ஒத்த கருத்தை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்தே தையிட்டி விகாரதிபதியும் ஊடக சந்திப்பினை மேற்கொண்டு , புதிய கட்டுமானங்களை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்வது. காணியை இழந்த இந்த மக்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடுவதனை நிறுத்த வேண்டும்.

இந்த மக்கள் தமது காணிகளை இழந்து வீதிகளில் நின்று போராடுகிறார்கள். அவர்களுக்கு காணிகளை கையளித்தால் , அவர்கள் போராட மாட்டார்கள் எனவே பொலிஸார் போராட்டங்களுக்கு தடை செய்யாது. போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி சுவிட்சர்லாந்து வெடிவிபத்தில் 47 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 பேர் கைது!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஞ்சல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மஞ்சள் அனகொண்டா காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு!

டிசம்பர் 9, 2025
இலங்கை

ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல்!

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?