சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த முயன்றதாக, கியூபெக் நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவரை கனடியஅரச பொலிஸார் (RCMP) கைது செய்துள்ளனர். என்ற வன்முறைவாத இணையக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாக ஜெஃப்ரி ரூசல் (Jeffrey Roussel) என்பவர் மீது
பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புப் பிரிவினர் (INSET) நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் விபரங்கள் வெளிவந்துள்ளன. டெலிகிராம் (Telegram) செயலி மூலம் மிக மோசமான வன்முறைக் காட்சிகளைப் பகிர்ந்து, பதின்ம வயதுச் சிறுவர்களை வன்முறைப் பாதைக்கு ஈர்ப்பதற்கு, ரூசல் முயன்றதாகக் கூறப்படுகிறது.
என்ற இந்த அமைப்பு, சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் Roblox, Minecraft மற்றும் Discord போன்ற விளையாட்டுத் தளங்களிலேயே, சிறுவர்களைத் தேடியுள்ளது. அந்த பயங்கரவாதக் குழுவிற்காகக் குற்றங்களைச் செய்தமை நிரூபிக்கப்பட்டால், ரூசலுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
உலகிலேயே முதல் நாடாக கனடா, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
