Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

”கியூபெக்கின் தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவோம்” – பிரதமர் மார்க் கார்னியுடனான சந்திப்பில் கியூபெக் முதல்வர் சூளுரை.

ஏப்ரல் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette), இன்று ஒட்டாவாவில் பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney) சந்தித்துப் பேசினார்.

பதவியேற்ற 48 மணிநேரத்திற்குள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கியூபெக்கின் தன்னாட்சி உரிமைகள் மற்றும் சர்ச்சைக்குரிய பில் 21 சட்டத்தைப் பாதுகாப்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பின் போது கியூபெக் மாகாணத்தின் நலன் சார்ந்த பல முக்கிய
விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

கியூபெக்கின் மதச்சார்பின்மைச் சட்டத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் 'நாட்வித்ஸ்டாண்டிங்' சட்டப்பிரிவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், இதற்காகப் போராடத் தயார் என்றும் கியூபெக் முதல்வர் ஃப்ரெச்செட் பிரதமரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கனடாவுக்கு வரும் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரை அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கியூபெக் மாகாணம் தற்போது அதிகப்படியான சுமையைச் சுமப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், வீட்டு வசதித் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். கியூபெக்கின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஃப்ரெச்செட் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கியூபெக் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு தேசியவாதத் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, கியூபெக் முதல்வர் ஃப்ரெச்செட் இந்தச் சந்திப்பைப் பயன்படுத்தியுள்ளார்.

பிரதமருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, லாவால் (Laval) பகுதிக்கு திரும்பிய கியூபெக் முதல்வர் ஃப்ரெச்செட், அங்கு பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்கான புதிய சலுகைகளை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு -இருவர் கைது
அடுத்த செய்தி நியூயோர்க்கிற்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் கனடா நிறுவனம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை – இந்திய மத்திய அரசு மறுப்பு..!!

பிப்ரவரி 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பில் ‘101’ சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 27,000 மாணவர்கள்

மே 13, 2026
கனடாமுதன்மை செய்தி

‘டக்ளஸ் மனநல பல்கலைக்கழக மருத்துவமனையில்’ பெரும் நீர் கசிவினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதம்

ஜனவரி 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கம் முன்வைத்த கடுமையான புதிய சட்டம்!

டிசம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?