Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடா வீணைமைந்தனுக்கு இயற் தமிழ் வித்தகர்’ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு.

ஏப்ரல் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கடந்த 23-03.2026 திங்கட்கிழமை அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக 2வது தளம் கவிஞர்களாலும், எழுத்தாளர்கள், கல்வியாளர்களாலும் நிரம்பி வழிந்தது.

கவியரசு கண்ணதாசன் தமிழ்சங்கம் (பம்மல்) பெருமையடன் நடத்திய வீணை மைந்தன் எழுதிய ‘நடிகர் திலகம் சிவாஜியும். தமிழ் சினிமாவும்’, ‘சினிமாவில் பாரத பாடல்கள்’ ஆகிய இரு நூல்களுடன், எழுத்தாளர், பேச்சாளர் திரு. அந்தமான் கிருஸ்ணமூர்த்தி எழுதிய ‘கற்போம் கம்பனில் அணி இலக்கணம்’ மற்றும் கவிஞர் காவிரி மைந்தன் எழுதிய’உலகெங்கும் ஒரே மொழி’ என நான்கு நூல்களின் வெளியீடும், மதிப்புரை வழங்கியும் மிகவும் சிறப்பானதொரு இலக்கிய விழா அரங்கம் நிறைந்த சபையினர் மத்தியில் அரங்கேறியது.

சென்னையில் திருமிகு சிவாஜி ரவி என யாவரினாலும் மதிக்கப்பெறும் சமூகசேவகரும், நடிகர் திலகத்தின் பேரில் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு கலை, சமூகத் தொண்டுகளை ஆற்றி வருபவருமான அவரது தலைமையில் விழா ஆரம்பமானது. முதலில் கனடிய எழுத்தாளர் திரு. வீணைமைந்தன் எழுதிய ‘நடிகர்திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்’ நூலை. . சிவாஜி ரவி அவர்கள் வெளியிட நூலைப் பெற்று மதிப்பரை வழங்கினார். முனைவர் தென்காசி கணேசன் அவர்கள். இரண்டாவது ‘தமிழ்ச் சினிமாவில் பாரதி பாடல்கள்;’ என்னும் நூலை தொழிலதிபர் வர முருகன் அவர்கள் வெளியிட ; ‘குமுதம் சிநேகிதி’ தொடர் எழுத்தாளர் திருமதி கல்யாணி ஸ்ரீதர் மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.

அடுத்து அந்தமான் கிருஸ்ணமூர்த்தி எழுதிய ‘கற்போம் கம்பனின் அணி இலக்கணம்’ நூலை திரு. அமுதா பாலகிருஸ்ணன் வெளியிட மனோதத்துவ நிபுணர் ஸடீபன் ராஜ் அவர்கள் மதிப்புரை வழங்கியும் , கவிஞர் காவிரி மைந்தன் அவர்கள் எழுதிய ;உலகமெங்கும் ஒரே மொழி’ கவிதை நூலை திரு கீத காந்தி பெற்றுக்கொள்ள துபாய் கவிஞர் திருமதி நர்கிஸ் பானு மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.

தொடர்ந்து, வாழ்த்துரைகளை மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் அவர்களும் பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் காப்பாளரும் கவிஞருமான வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களும் ‘கலைமாமணி’ ஏர்வாடி ராதாகிருஸ்ணன் அவர்களும் வழங்க தொடர்ந்து நூல்கள் வெளியீடும் மதிப்புரைகளும் சிறப்பாக இடம்பெற்றன.

விழாவின் இறுதியில் கனடா வாழ் கவிஞரும் எழுத்தாளருமான வீணைமைந்தன் அவர்களுக்கு சிவாஜி ரவி அவர்கள் தலைமையில் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் மற்றும் ‘கவிதை உறவு ஆகிய நிறுவனங்களின் சார்பில் கல்வியாளர்கள், சான்றோர்கள், கவிஞர்கள் மற்றும் பலர் இணைந்து வீணைமைந்தன் சணமுகராஜா அவர்களுக்கு ‘இயற் தமிழ் வித்தகர்’ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்கள். அப்போது அனைவரும் ஒன்றாக இணைந்து ”இயல் தமிழ் வித்தகர்’ வீணைமைந்தன்” என்று மூன்று தடவைகள் உரத்து உச்சரித்த வாழ்த்தொலி அந்த விழா அரங்கில் எதிரொலித்தது.

முந்தைய செய்தி ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை காலவரையறையின்றித் தொடரும் – பென்டகன் அதிரடி எச்சரிக்கை.
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் – 17 ஏப்ரல் 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – மாணவர்கள் போராட்டம்

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

அக்டோபர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?