Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பிற்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி உத்தரவிட்டடிருந்த நிலையிலேயே நேற்று சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையான், சுமார் ஒரு வருடங்களின் பின்னர் கடந்த 02ஆம் திகதி மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அன்றையதினமே கொழும்பு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், நேற்று மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் வாந்தி எடுத்த எட்டு வயது சிறுமி உயிரிழப்பு
அடுத்த செய்தி இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்டெடுப்பு!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மூவர் கைது

அக்டோபர் 17, 2025
இலங்கை

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தல்!

ஜூலை 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?