இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை கான்ஸ்டபிள், குறித்த கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய சகா ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
