Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதுக்குடியிருப்பில் ஆரம்பமான உலக தெங்கு தின கொண்டாட்டம்

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(02) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்க தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சமய சம்பிரதயங்களின் அடிப்படையில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு நிகழ்வுகள் மிகச் சிறப்பானமுறையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த தெங்கு முக்கோண வலையங்களுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை முதலான இடங்கள் தெங்கு முக்கோண வலையங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்னைப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதாரத்தினை மேம்படையச் செய்யும் நோக்கிலும் இந்த செயற்றிட்டம் வடமாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கான தென்னம்பிள்ளைகளை இலவசமாக வழங்கவுள்ளதுடன் மிகக் குறைந்த விலையில் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கௌரவ சந்திர சேகரம், பெருந்தோட்ட உட்கட்டமைப்புகள் அமைச்சர் கௌரவ சமந்த வித்தியாரட்ண, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலகநாதன், ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா, யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களிற்கு செயற்கை நுண்ணறிவு செயலமர்வு
அடுத்த செய்தி ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி அரோனிக்கா ரேச்சல்

செப்டம்பர் 5, 2025
இலங்கை

கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் மாயம்!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

இந்திய இழுவைப்படகுகள் கட்டுப்படுத்த இயலாதெனில் வடபகுதி மீனவர்களிடம் அந்தப் பொறுப்பை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி காட்டம்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?