வவுனியா மாவட்ட உயர்தரத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களிற்கு, கற்றல் முறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு செயலமர்வு இன்றையதினம் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா பல்கலைக்கழக தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தினால் குறித்த செயலமர்வானது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இதன்போது பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பல்துறை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மன்றத்தின் பேராசிரியர்கள், கலாநிதிப் பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்கள் இச்செயலமர்வில் வளவாளர்களாக கலந்துகொண்டசெயற்கை நுண்ணறிவு தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
வவுனியா பல்கலைக்கழக தொழில்நுட்ப கற்கைகள் பீட பீடாதிபதி வி.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் அ.அற்புதராஜா, பேராதனை பல்கலைக்கழக கணினிப் பொறியியல் பேராசிரியர் ரொஷான் றாகல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
