வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நேற்று 16.07) இரவு ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
