ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற சாதனையாளரும், கியூபெக் மாகாண அமைச்சருமான இசபெல் சாரெஸ்ட் (Isabelle Charest), எதிர்வரும் மாகாணப் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், தனது பதவிக்காலம் முடிந்ததும் அரசியலில் இருந்து விலகி, தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ‘CAQ’ கட்சியின் சார்பில் ‘ப்ரோம்-மிசிஸ்குவா’ (Brome-Missisquoi) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசபெல், முதலமைச்சர் பிரான்சுவா லெகோவின் அமைச்சரவையில் ஒரு முக்கிய பிரபலமாக விளங்கினார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியதில் திருப்தி அடைவதாகவும், இனி வரும் காலத்தைக் குடும்பத்திற்காகவும், புதிய சவால்களை எதிர்கொள்வதற்காகவும் செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கியூபெக்கை தற்போது ஆண்டுவரும் CAQ கட்சிக்கு இசபெல்லின் இந்த முடிவு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
