ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக நெட் ப்ளொக்ஸ் (NetBlocks) நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் காலத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை இதன் மூலம் மீறப்படுவதாகச் சில ஆய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் தடையை மீறி அவ்வப்போது இணையத்துடன் இணைய முயன்ற 466 பேர் கடந்த சில நாட்களில் ஈரான் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
