வவுனியா, சாந்தசோலை ஏ 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.


